Tuesday, September 6, 2022

ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டிய புத்தகங்கள்


1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.
3. ஆயிஷா – இரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடற – பாரதி தம்பி
11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.
14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்
20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ் – இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலை – பிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறை – மதி
47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்

இந்தப் புத்தகங்களை எழுதிய கல்வியின்பாலும் குழந்தைகள் மேலும் பிரியம் கொண்ட நூலாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான வணக்கங்களும், நன்றிகளும்...

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்…

Monday, June 27, 2022

இல்லம் தேடி கல்வி காடையாம்பட்டி - கஞ்சநாய்க்கன்பட்டி குறுவள மைய அளவிலான தன்னார்வலர்கள் கூட்டம்

🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔥🔥🔥🔥🔥💐💐💐💐💐🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 அனைத்து தலைமையாசிரி பெருமக்களுக்கும் இனிய வணக்கம் நாளை காலை 11 மணியளவில் கஞ்சநாயக்கன்பட்டி குறுவளமைய திற்கு உட்பட்ட 13 பள்ளிகளிலிருந்து பணியாற்றும் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் அனைவருக்கும் குறுவளமைய அளவிலான கூட்டம் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் 1. கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் கண்காட்சியில் பங்கு பெற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் சான்றிதழ் வழங்குதல் 2. வாசிப்பு மாரத்தான் இயக்கம் READ ALONG செயலியை பயன்படுத்தியதன் ஆர்வலர்களுக்கு பாராட்டு தெரிவித்தல் 3.3ம் கட்ட கற்பித்தல் கையேடு மற்றும் அட்டைகள் வழங்குதல். 4. எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகம். 5. தொடுவானம் இதழ் குறித்த தகவல் 6. தற்காலிக பள்ளி ஆசிரியர்கள் நியமனத்தில் தன்னார்வலர் களுக்கான முன்னுரிமை விவரம் சேகரித்தல் 7. செயல்படாத மையங்கள் குறித்த விவரம் சேகரித்தல் (HM LETTER ) 8. தன்னார்வலர்கள் இல்லாத குடியிருப்பு பகுதியில் புதிய தன்னார்வலர்கள் நியமித்தல். 9. ஊக்கத்தொகை பெறாதவர்கள் விவரம் மற்றும் இதுநாள்வரை பெற்ற ஊக்கத்தொகை விவரங்கள் சேகரித்தல். (SCHOOL WISE REPORT FROM HM) 10. தன்னார்வலர்களின் புதுமையான செயல்பாடுகளை ஊக்குவித்தல். மேற்காண் பொருள் குறித்து கூட்டம் நடைபெற இருப்பதால் அனைத்து தலைமை ஆசிரியர் பெருமக்களும் தங்கள் பள்ளிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் செயல்படும் மையங்களின் தன்னார்வலர்கள் அனைவருக்கும் தவறாமல் தகவல் அளித்து கட்டாயம் கூட்டத்தில் கலந்து கொள்ள வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👆👆👆👆👆👆👆👆💐💐💐💐💐💐💐💐💐🔊🔊🔊🔊🔊🔊

தொடுவானம் இரண்டாவது இதழ்

Emailing Thoduvaanam e Book Reduced_2 by SS EDU MEDIA KADAYAMPATTI on Scribd

Friday, May 13, 2022

சிறப்பு நண்பன் - விழியன்

சிறப்பு நண்பன் - விழியன்

           வழக்கமாக லோகி எழும் நேரம் காலை ஆறு முப்பது. ஒன்பது மணிக்கு பள்ளி திறந்துவிடும். இரண்டு ஆண்டுகளாக இணைய வழியே வகுப்புகள் நடந்ததால் எட்டே முக்காலுக்குத்தான் லோகி எழுவான். பள்ளிகள் திறந்து இரண்டு வாரமாகி இருக்கும். ஆறு முப்பதுக்கு எழுந்துகொள்வதே சிரமமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக இன்று ஐந்து மணிக்கே அலாரம் வைத்து எழுந்துவிட்டான். ஐந்தரைக்கு எல்லாம் குளித்துவிட்டான். தூங்கிக்கொண்டிருந்த அப்பாவை நச்சரித்து எழுப்பி தன் பள்ளி சீருடைகளை இஸ்திரி போட்டுத்தரச்சொன்னான். ஏழு மணிக்கு லோகி தயார். அரை நாள் மட்டுமே பள்ளி என்பதால் மதிய சாப்பாடு எடுத்துச்செல்ல தேவையில்லை. 

ஒன்பது மணி பள்ளிக்கு, எட்டு மணிக்கு எல்லாம் போய்விட்டான். அவனை பள்ளியின் வாசலில் அப்பா இறக்கிவிட, ஒரு கல்லினை தட்டிக்கொண்டே பள்ளி மைதானத்தைக் கடந்து வகுப்பறைக்குச் சென்றுவிட்டான். முகத்தில் இருந்த மாஸ்க்கை இறக்கிவிட்டு புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவிட்டான். முன்னர் அமர்ந்து இருந்த 1B வகுப்பினைப் பார்த்து சிரித்துக்கொண்டான். இப்போது முன்னேறி 3Bக்கு போயாச்சு. அவனுக்கு முன்னர் வகுப்பில் ஒருத்தி மட்டும் இருந்தாள். மூன்றாவது வரிசையில் இருக்கும் தன் இருக்கையில் பையினை வைத்துவிட்டு

“ஜெனிஸ், இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”
அவனுக்கு நான்காவது பாடவேளை PET வகுப்பு என நன்றாக தெரியும். ஆனாலும் ஒருமுறை உறுதிபடுத்திக்கொண்டான். பத்திரமாக இருந்த வெள்ளை ஷூவினை தூசி தட்டி காலையில் அதனை மாட்டிக்கொண்டு வந்துவிட்டான். கால் கொஞ்சம் வளர்ந்து இருந்தது. ”செருப்பே போட்டுகிட்டு போ லோகி”ன்னு அம்மா சொன்னாலும் கேட்காமல் ஷூ போட்டுக்கொண்டு வந்துவிட்டான். தன் இருக்கைக்கு திரும்பி ரப் நோட் எடுத்து லோகி என்று தமிழில் எழுதிவிட்டு புட் பால் ஒன்றினை வரைந்தான்.

மகிழ் வந்தான் அவனிடன் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?” என்றான். சாந்தா வந்தாள் அவளிடம் “ இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ரிஷப் வந்தான் அவனிடம் “இன்னைக்கு எத்தனையாவது பீரியட் பிடி பீரியட்?”. ஒவ்வொருவராக வரவர இதே கேள்வி. டேனியல் வந்த போது மட்டும் “சாப்பிட்டியா டேனி” என்றான்.

வகுப்பிலேயே எல்லோரும் எழுந்து நின்று ப்ரேயரை முடித்துக்கொண்டனர். ”அடுத்த வாரம் முதல் அசம்ப்ளி அறையில் நடக்கும்” என்று நேற்றே சொல்லிவிட்டார் தமிழ் ஆசிரியர். பள்ளி திறந்த மூன்றாம் நாள், டைம் டேபிளை கரும்பலகையில் எழுதிப்போட்டபோது “PET" என்பதை மட்டும் நான்கு வண்ணங்களில் அடித்து வைத்திருந்தான் லோகி. தமிழ் ஆசிரியர் பென்சில்களைப் பற்றி பாடம் எடுத்துக்கொண்டு இருந்தார். லோகி கையை உயர்த்தினான்.
“என்ன சந்தேகம் லோகி?”
“மிஸ், நாலாவது பீரியட் பிடி தானே மிஸ்”
வகுப்பே கொல் என்று சிரித்தது. ஆமா அதான் உன் சந்தேகமா என முறைத்துவிட்டு பாடத்தை தொடர்ந்தார். இரண்டு பாடவேளைகளுக்க பின்னர் இடைவேளை வந்தது. வரிசையில் ஒவ்வொருவராக கழிவறைக்கு சென்று வந்தனர். “டேனி, வரலையா?” என்று கேட்டான் லோகி. இல்லை என்று தலையாட்டி மறுத்துவிட்டான். 

மூன்றாம் வகுப்பு ஆங்கிலம். அந்த வகுப்பில் யாரும் பேசக்கூடாது. பயங்கரமா கத்திடுவாங்க. இவங்க புது டீச்சர். ஆன்லைன் வந்த பிறகு வந்தவங்க. லோகிக்கு பக்கத்தில் இருந்த சஷாங் “ஏண்டா பிடி பீரியட் மேல அவ்ளோ ஆசை”
“அது பி.இ.டி. Physical Education and Training"
"வாட் இஸ் த சவுண்ட் தேர்”
அமைதியானது. கொஞ்ச நேரத்தில் மணி அடித்தது. வகுப்பில் ஒரே பரபரப்பு. லோகி குனிந்து தன் ஷூ லேசை இறுகக்கட்டிக்கொண்டான். தண்ணீர் குடித்துக்கொண்டான். 

ஆனால்..
கணித ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.
“மிஸ்ஸ்ஸ்ஸ்” என்று எல்லோரும் கத்த. “போர்ஷன் முடிக்கணும். அடுத்த வருஷம் விளையாடிக்கலாம்” என்றார் ஒரே போடாக. நேராக கரும்பலகையை துடைக்க ஆரம்பித்தார். லோகியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லோருமே அவனைத்தான் பார்த்தார்கள். டீச்சர் வரும்போது இருக்கையில் இருந்து எழுவார்கள். எழுந்த லோகி அமரவே இல்லை. மலர்ந்து இருந்த முகம் வாடிவிட்டது. “சிட் டவுன் லோகி”. அவன் அமரவில்லை. திரும்பத் திரும்ப சொன்னாலும் அமரவில்லை.

குனிந்துகொண்டிருந்த லோகி சன்னமான குரலில் “அ....” என்று ராகமிசைக்க ஆரம்பித்தான். கத்தவில்லை. அ..அ...அ.... என்று சொல்லிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இருந்த சஷாங்கும் எழுந்து “அ...” என்று ராகமிசைத்தான். ரெண்டு பேரும் உட்காருங்க, இன்னைக்கு பிஇடி கிடையாது என்றார். ஏன் இவர்கள் கத்துகின்றார்கள் என புரிந்துவிட்டது. இருவரும் நிறுத்தவில்லை. மெல்ல மெல்ல மகிழ், ரிஷப், சாந்தா என எல்லோரும் எழுந்து “அ....” என்று ராகமிசைத்தனர். கணித ஆசிரியருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. புதிய ஆசிரியர் வேறு. “ஸ்டூடன்ஸ் ப்ளீஸ் சிட்” என்று கெஞ்சினார்.

சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள் – விழியன்

சைக்லிஸ்டைடின் புதிய நண்பர்கள் – விழியன்

        சைக்லிஸ்ட் என்றால் யார் தெரியுமா? வீட்டில் இருந்து பள்ளிக்கோ அலுவலகத்திற்கோ செல்பவர்களை சைக்லிஸ்ட் எனச் சொல்லமாட்டார்கள். சைக்லிஸ்ட் என்பவர்கள் நெடும்தூரம் சைக்கிளில் பயணம் செய்பவர்கள். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு, ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கூட சைக்கிளில் பயணம் செய்வார்கள். அவர்கள் ஆசிரியராகவோ, இசைக் கலைஞராகவோ, புகைப்பட கலைஞராகவோ, பெயிண்டராகவோ, விஞ்ஞானியாகவோ, எந்தப் பணி செய்பவராகவும் இருக்கலாம்.
சரி, கதைக்கு வருவோம். நம் கதையின் நாயகன் ஒரு சைக்லிஸ்ட். அவர் ஒரு கணித விஞ்ஞானி. பெயர் ஹான்ஸ். அவர் ஹாலாந்து நாட்டுக்காரர். அவருக்கு ஆஸ்திரேலியா கண்டத்தை சுற்றிப்பார்க்க ஆசை. (ஹாலந்து நாடு எங்கே இருக்கு, ஆஸ்திரேலியா நாடு எங்கே இருக்கு என அப்பா/அம்மாவை காட்டச்சொல்லவும்). அதுவும் சைக்கிளில் சுற்றிப்பார்க்க ஆசை. கிளம்பியும் விட்டார். நம்ம ஊர்களைப்போல நிறைய வீடுகள் எல்லாம் ஆஸ்திரேலியாவில் இல்லை. மனிதர்களும் மிகவும் குறைவு தான். சில சமயம் ஒருவீட்டிற்கும் மற்ற வீட்டிற்கும் இடைவெளி சுமார் 200 கி.மீட்டர் கூட இருக்குமாம். நம்ம ஊரிகளில் நம்ம வீட்டிற்கும் எதிர் வீட்டிற்கும் இடைவெளி பத்து மீட்டர் தான் இருக்கும்.

ஒரே ஒரு பை மட்டுமே எடுத்துச்சென்றார். ஹான்ஸின் பையில் இருந்தது 2-3 ஆடைகள். உணவுப்பொருட்கள். நிறைய தண்ணீர். இரண்டு நாளைக்கு தேவையான தண்ணீர் எடுத்துச்செல்ல வேண்டும் அல்லவா. தண்ணீர் தான் பிரதானம். அதே போல இரவு எங்கேனும் தங்குவதற்கு ஒரு டெண்ட் இருந்தது. டார்ச் லைட். அந்த சாலை நேராக இருந்தது. மிக நேராக ஒரு நேர் கோடுபோல. வளைவுகள் எதுவும் இல்லை. எவ்வளவு தூரம் நேராக இருந்தது தெரியுமா? 1200 கி.மீட்டர். ரொம்ப தூரம் தான் இல்லையா.. அவருக்கு பிடித்தமான பாடலை பாடிக்கொண்டே சைக்கிள் ஓட்டிச்சென்றார். பல கிலோமீட்டர்களுக்கு இரண்டு பக்கமும் எதுவும் இல்லை. நம்ம ஊர்களைப்போல வயல்கள், மரங்கள் கூட இல்லை. தூரத்தில் ஏதாவும் நகர்வதைப்போல இருக்கும். அவை கங்காருக்கள். ஆஸ்திரேலியாவில் இரண்டு மிருகங்கள் தான் அதிகம் கங்காருக்கள் மற்றும் கோவாலா கரடிகள்.
இரண்டு பக்கமும் மரங்கள் இருக்கும் சாலையில் சென்றுகொண்டிருந்தார் ஹான்ஸ். அப்போது தான் யாரோ தன்னை பார்ப்பது போலவும் பின் தொடர்வது போலவும் உணர்ந்தார். மரத்தில் அசைவுகள் இருந்தது. சைக்கிளை நிறுத்தி ஒரு மர நிழலில் அமர்ந்தார். சாப்பிட தோன்றியது. நாளை மாலை தான் இதோடு வீடுகள் தென்படும் எனச் சொல்லி இருந்தார்கள். அதனால் தண்ணீரை கவனமாக பயன்படுத்தினார்.

அவர் முன்னே திடீரென இரண்டு உருவங்கள். ஆமாம் கோவாலா கரடிகள் தான். மூக்கு நீளமாக இருக்கும். குட்டி குழந்தை போல அழகாக இருக்கும். ஹான்ஸ் அந்த கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். அவை அங்கேயே நின்றன. தான் சாப்பிடும் ரொட்டித்துண்டுகள் சிலவற்றை கரடிகளுக்கு கொடுத்தார். அவை வாங்கி தின்றன. தண்ணீர் பாட்டிலைக் கேட்டு அதிலிருந்த தண்ணீரையும் பருகின.

அங்கிருந்து ஹான்ஸ் கிளம்பும்போது தானும் அவருடன் சைக்கிளில் வருவதாக சைகை செய்தன. அவரும் தன் பையை முன்னே வைத்துக்கொண்டு பின்னிருக்கையில் கோவாலா கரடிகளை அமர வைத்தார். கூடுதல் சுமை இருந்ததால் கொஞ்சம் மெதுவாகவே சைக்கிளை செலுத்தினார். இரண்டு மணி நேரம் கழித்து ஒரு இடத்தில் ஓய்வெடுத்தார். அடிக்கடி கோவாலா கரடிகளைப் பார்த்து புன்னகைத்தார். இருட்ட துவங்கியதும் ஒரு நல்ல இடமாக பார்த்து டெண்ட் அமைத்தார். கோவாலா கரடிகளும் அவருடன் தங்கின. உணவு மறுநாள் இரவு வரை வராது. தண்ணீரும் தீரும் நிலையில் இருந்தது. ஆனாலும் மகிழ்வாக கரடிகளுடன் பகிர்ந்தார்.

ஒரு நாள் முழுக்க சைக்கிள் ஓட்டியதால் அசதியாக இருந்தது ஹான்ஸிற்கு. உறங்கிவிட்டார். நடு இரவில் பயங்கர சத்தம். வெளியே எட்டிப்பார்த்தபோது கோவாலா கரடிகள் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. தூரத்தில் ஒரு பெரிய மிருகம் ஓடிக்கொண்டிருந்தது. ஹான்ஸை இந்த கரடிகள் தான் காப்பாற்றி இருக்கின்றது. மீண்டும் புன்னகைத்துவிட்டு நிம்மதியாக உறங்கினார் ஹான்ஸ். 

காலை எழுந்த போது இரண்டு கரடிகளும் அருகே காணவில்லை. அவர் தண்ணீர் பருகும் பாட்டில் மட்டும் காணவில்லை. டெண்டை மடக்கி பொருட்களை பையில் போட்டு கிளம்ப தயாரானார். தூரத்தில் இரண்டு கரடிகள் வருவது தெரிந்தது. கையில் தண்ணீர் பாட்டில். பாட்டில் நிறைய தண்ணீர் இருந்தது. மற்றொரு கரடியின் கையில் நிறைய பழங்கள் இருந்தன. ஹான்ஸிடம் கொடுக்கப்பட்டது. பையில் வைத்துக்கொண்டார். சைக்கிளில் ஏற சைகை செய்தார். கரடிகள் ஏறவில்லை. போய்வாருங்கள் என்பது போல சொன்னது. ஹான்ஸ் சைக்கிள் ஏறி கைகள் அசைத்து தன் பயணத்தை மீண்டும் துவங்கினார்.

-விழியன்

(ஹான்ஸ் நிஜமான விஞ்ஞானி. ஆறுமாதம் ஆஸ்திரேலியாவை சைக்கிளில் சுற்றிவந்தவர். நேரடியாக அவருடைய அனுபவங்களை கேட்டு மகிழ்ந்தேன். மற்றபடி கோவாலா கரடிகள் கதை கற்பனையே)