Sunday, January 16, 2022

ஓர்.. இ.ஆ.ப.. அதிகாரியும்… இ.தே.க. வும்…(இல்லம் தேடிக் கல்வி)

ஓர்.. இ.ஆ.ப.. அதிகாரியும்… இ.தே.க. வும்…(இல்லம் தேடிக் கல்வி)
 தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி செல்ல முடியுமா, இதோ சென்று தன்னார்வலர்களின் இதயங்களை வென்றிருக்கிறார் தமிழகத்தின் இளம் ஐ.ஏ.எஸ்… அதிகாரி.. இளம் பகவத் அவர்கள்.
 கொரோனா இதோ இன்றும் துரத்திக் கொண்டிருக்கிறது. 1 முதல் 12 வகுப்புகளுக்கும் 31 வரை விடுமுறைவிட்டாச்சு… 2019 இறுதியில் ஆரம்பித்த கொரோனா ஒரு முடிவே இல்லாமல் இயக்குனர் ஹரியின் சிங்கம் 1, சிங்கம் 2 , சிங்கம் 3 என்பது போல போய்க்கொண்டிருக்கிறது. எங்கு போய் முடியுமோ தெரியவில்லை… பள்ளிக் குழந்தைகளின் கற்றல் கற்பித்தல் மிகப் பெரிய தொய்வைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
 இந்நேரத்தில் தான் இல்லம் தேடிக்கல்வித் திட்டம் இன்றியமையாததாக மாறியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்கள், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இல்லம் தேடிக்கல்வி மையங்கள் என ஒரு கல்விப் புரட்சி சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில்… 
 தினமும் மாலை நேரம் ஒரு மணி நேரம் 1முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு அவர்களின் வீட்டு அருகே படித்த இளம்பெண்கள் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ தமிழகத்தின் தலைநகரில் இருந்து கொண்டு திட்டம் தீட்டி ஆரம்பம் அசத்தல் போக போக சொதப்பல் போன்ற திட்டமல்ல இது… இல்லம் தேடிக்கல்வித் திட்டம். கொரேனா காலத்தில் கற்றல் கற்பித்தலை தங்கு தடையில்லாமல் நடத்தித் தரும் உன்னத திட்டம்..
 உலகம் முழுவதும் கண்டுகொள்ளாமல் இருந்த பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தும் உன்னதத் திட்டம். படித்த பெண்கள் வீடே கதி என்றிருந்த பெண்களின் ஆற்றலை அவர்களின் மனித வளத்தைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்தும் மாபெரும் கல்விப் புரட்சித்திட்டம். இல்லம் தேடிக்கல்வித் திட்டம். 
 அதற்கு இளம்பகவத் சார் செய்த வித்தியாசமான முயற்சிதான் தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது… சாதாரண காரியமில்லை… ஒரு பள்ளியில் வேலைபார்க்கும் 5 பேரில் 5பேரும் வெவ்வேறு திசைநோக்கி இருக்கும் இக்காலத்தில் , ஒரு தெருவில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் யாரென்றே தெரியாத இக்காலத்தில், எடுத்தா வாய்க்கால் தகராறு பார்த்தா பக்கத்து வீட்டு எல்லைத் தகராறு, உறவுகளுக்குள் சிக்கல், அலைபேசியின் கோர முகத்தால் முகம் பார்க்கமல் பேசும் நட்புகள் என்று இப்படியான காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள இளம் பெண்கள் படித்தவர்களைக் கொண்டு இல்லம் தேடிக்கல்வி திட்டத்தை இனிமையாக நடத்தி வருகிறார்…
ஒரு இலட்சம் மையம் நடத்துவது என்பது எவ்வளவு சிரமமான காரியம்.. அதிலும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பது அதில் சிறந்தவற்றைப் பாராட்டுவது, ஆலோசனைகள் வழங்குவது என்பது அப்பப்பா…..
 ஆனால் அனைத்தையும் முறியடித்து வெற்றி நடை போடுகிறார் இவர். நேற்று தன்னார்வலர்களுக்கான உரையாடல் ஒன்றைத் திட்டமிட்டு, அவர்களின் செயலபாடுகளை எழுதி வாங்கி அவற்றுள் சிறந்தவற்றைத் தொகுத்து, அவர்களை பேசச் செய்து அதில் உள்ள அவர்களின் செயல்பாட்டைப் பாராட்டி ஆலோசனைகள் வழங்கி நேற்றைய நாள் இல்லம் தேடிக் கல்வித்தட்டத்தின் பொன்னாள் எனலாம்.
 தமிழகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் தங்களின் செயல்பாடுகளை விளக்கிக் கூறினர். நேரிடையாக ஒரு திட்டத்தின் உயர் அதிகாரியிடம் இறுதிநிலை ஊழியர் ஒருவர் பேசுவது அதுவும் இயல்பாக பேசுவது என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று. ஒரு ஆசிரியராக நான் உயரதிகாரிகளிடம் பேசுவது என்பது இந்த 13 வருட காலக்கட்டத்தில் ஏதேனும் ஓரிரு சந்தர்ப்பத்தில் அமைந்தது..
 ஆனால் ஒரு மாதம் பணியாற்றிய ஒரு தன்னார்வலரிடம் ஒரு அதிகாரியின் கலந்துரையாடல் என்பது கல்விப்புரட்சி என்றே சொல்லலாம். தன்னார்வலர்களின் செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன. அவர்களின் பேச்சும் செயல்பாடுகளும் உண்மையிலேயே தன்னார்வத்தை வெளிப்படுத்துகின்றன. 
 தொடர்ந்து இதேபோல் உரையாடல்கள் தொடரும்… அதிலும் தன்னார்வலர்களுக்கு சர்ப்ரைஸ் வேறு வைத்திருக்கிறார்.. ஒரு முக்கிய ஆளுமை உங்களிடம் உரையாட போகிறார் தயாராக இருங்கள்.. உங்களின் செயல்பாடுகள் உங்களை அவரிடம் பேசவைக்கும் என்று…
 தன்னார்வலர்களின் செயல்பாடுகள் வியக்க வைக்கின்றன… ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் தன்னார்வலர்களே…. குழுவின் ஒருங்கிணைப்பாளர்களே…. வாழ்த்துக்கள் தொடர்ந்து பயணிப்போம்… இல்லம் தேடிக்கல்வியை இமாலய வெற்றி பெறச் செய்வோம்.. கை கோர்ப்போம்… 

 தன்னார்வலர்கள் அனைவரும் இந்தக் குழுவில் இணைவதை உறுதி செய்யும் விதமாக இந்தக் குழுவின் இணைப்பை அனைத்து மாவட்ட வாட்ஸ்அப் குரூப்களில் பகிர்ந்து வருக.

ITK TN Volunteers : https://t.me/+h4DsqIH4cUw3NGFl

ITK Selected Images: https://t.me/+gmR_ANVvN-gzYTBl

ITK Selected Videos: https://t.me/+4bxmAfpyTh5jNzA1

ITK Volunteers Grievances : https://t.me/+XuTCWvIX4QQ5OGVl

மு.பாலகிருஷ்ணன்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
இல்லம் தேடிக்கல்வி தூத்துக்குடி மாவட்டம்.